மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வடிவேலுவை எச்சரித்த சமுத்திரகனி

வடிவேலுவை எச்சரித்த சமுத்திரகனி

நடிகர் வடிவேலுவின் பேட்டிக்கு இயக்குனர் நவீனைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முகநூலில் தமிழகத்தை சேர்ந்த, ஒருவர் விளையாட்டாய் பதிவிட்ட செய்தி ஒன்றால், பல வருங்களுக்கு முன்னர், ஃப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்த காண்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம், மீண்டும் உலக அரங்கில் டிரெண்ட் ஆனது. பலரும் இது குறித்து பேசி வந்தனர். நடிகர் வடிவேலுவும் இது தொடர்பாக பலருக்கும் பேட்டி அளித்தார். இதனைத் தொடர்ந்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு நடிகர் வடிவேலு, பேட்டி அளித்திருந்தார். ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சமீபகாலங்களில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் என்ன, அன்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வடிவேலு இயக்குநர் சிம்பு தேவன்-இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவரது பேட்டிக்கு, பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இயக்குநர் சிம்பு தேவனிடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் மூடர் கூடம் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான நவீன், #NesamaniInComa மற்றும் #NesamaniStayInComa ஆகிய ஹேஷ்டேக்களில் அவர் தனது ட்வீட்களைப் பதிவிட்டு வடிவேலு அளித்த இந்த பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது, சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலுவின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்!” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் படிக்க


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon