மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 ஜன 2020

தர்மதுரை கூட்டணியின் அடுத்த ரவுண்டு!

தர்மதுரை கூட்டணியின் அடுத்த ரவுண்டு!

நடிகர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கியது.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். மேற்சொன்ன மூன்று படங்களும் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள நிலையில் இந்தப் படமும் அத்தகைய பின்புலத்தில் உருவாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அறம், ஐரா, தும்பா போன்ற படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon