மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!

அமமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து விலகி பலரும் அதிமுகவில் இணைந்துவருகிறார்கள். ஆனால், ஒரு சிலரோ அல்லது 10 பேரோ விலகினால் அமமுகவுக்கு பாதிப்பில்லை என்று தினகரன் கருத்து தெரிவித்துவிட்டார். கடந்த 3ஆம் தேதி நெல்லை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா, அத்தொகுதியின் வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

அந்த வகையில் இன்று ( ஜூன் 11) சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.

2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவிவகித்த இன்பத்தமிழன், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு 2009இல் ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். முன்னாள் அமைச்சர் தாமரைக்கனியின் மகனான இவர், தினகரனின் அமமுகவில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார்.

இதுதொடர்பாக அதிமுக ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் இன்று அமமுக கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரான திரு. ஆர்.டி.இன்பத்தமிழன் அவர்கள் நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவினரும், அதிமுகவில் இணைந்தனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon