மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

பைக் வாங்கும்போது ஹெல்மெட் கட்டாயம்!

பைக் வாங்கும்போது ஹெல்மெட் கட்டாயம்!

தமிழகத்தில் இனி இருசக்கர வாகனங்களை வாங்கும்போது அதனுடன் இரண்டு ஹெல்மெட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் டீலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் ஏராளம். ஹெல்மெட் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டாலும் விபத்துகளும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. அரசு தரப்பிலும் போக்குவரத்து காவல் துறை சார்பிலும் விபத்துகளைக் குறைக்கத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹெல்மெட் விதிமுறைகள் தமிழகத்தில் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருந்தது.

மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 138(4)(f)-இன் படி, விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்கள் அனைத்தும் பி.ஐ.எஸ். தரச்சான்று பெற்றிருப்பது கட்டாயமாகும். அரசு தரப்பு புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு மூன்று சாலை விபத்துக்கும் ஒன்று இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நடைபெறுகிறது. அதிலும், இருசக்கர வாகன விபத்தைச் சந்திப்பவர்களில் 73 சதவிகிதத்தினர் ஹெல்மெட் அணிவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கும் விதத்தில் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் ஹெல்மெட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை ஆணையர் சி.சத்தியமூர்த்தி, ஆட்டோமொபைல் டீலர்களிடமிருந்து இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த ஆதரவு வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இனி பைக் வாங்கும்போது வாடிக்கையாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனுடன் சேர்த்து 2 ஹெல்மெட்களும் வழங்கப்படும்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்


எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon