மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

சென்னை: குறையும் வீட்டுக் கடன்!

சென்னை: குறையும் வீட்டுக் கடன்!

சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் வீட்டுக் கடன்கள் 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சொத்து ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல் இந்திய நகரங்களில் வீட்டுக் கடன் நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2012-13ஆம் ஆண்டில் திருப்பிச் செலுத்தாத வீட்டுக் கடன்களின் அளவு சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் 22 சதவிகிதமாக இருந்து, 2017-18ஆம் ஆண்டில் 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் 50 மாவட்டங்களில் இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் வீட்டுக் கடன் வளர்ச்சி 15 முதல் 36 சதவிகிதம் வரையில் இருக்கிறது.

இந்தியாவின் வீட்டுக் கடன் சந்தை மதிப்பு தற்போது ரூ.9.7 லட்சம் கோடியாக இருக்கிறது. 2012-13ஆம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.4.6 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. இந்த ஆய்விலிருந்து இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில்தாம் சொத்துகளை வாங்க மக்கள் அதிகமாக முன்வருவதாகத் தெரியவந்துள்ளது. வீட்டுக் கடன் சந்தையில் மொத்தக் கடனில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு நகரங்களின் பங்களிப்பு 22 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

சாலை இணைப்பு, உள்கட்டுமானத் துறை வளர்ச்சி, சிறந்த கல்விச் சேவை மற்றும் சுகாதாரச் செலவுகள் ஆகியவை மேம்பட்டுள்ளதால்தான் பின்தங்கிய நகரங்களில் வீட்டுக் கடன் வளர்ச்சி அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon