மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் புள்ளி!

உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் புள்ளி!

மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாப்பிரிக்கா இடையேயான நேற்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் சுற்றின் 15ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 10) மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி 7.3 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஷெல்டன் காட்ரெல் வேகத்தில் ஹசிம் ஆம்லா மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகிய இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து விளையாடுவதற்கான சூழல் இல்லாததால் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாகப் போட்டி நடுவர்கள் அறிவித்துவிட்டனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி தனது புள்ளிக் கணக்கைத் தொடங்கியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. உலகக் கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை அணிதான் வெற்றிபெற்றுள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் இலங்கை அணியின் கையே ஓங்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதால் அணிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தலாம்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon