மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

சிஷ்யருக்கு ஆதரவு வழங்கிய குரு!

சிஷ்யருக்கு ஆதரவு வழங்கிய குரு!

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பாக்யராஜுக்கு பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவுபெற்றுள்ள நிலையில் தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த திரையுலகமும் உன்னிப்பாக இந்தத் தேர்தலைக் கவனித்துக்கொண்டிருக்க சத்தமில்லாமல் இயக்குநர்கள் சங்கத்திற்கான தலைவராக நேற்று (ஜூன் 10) பாரதிராஜா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொறுத்தவரை பாரதிராஜா, விஷால் தலைமையிலான அணிக்கு எதிராகச் செயல்பட்டு வந்தார். விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தேர்தல் வரவுள்ள நிலையில் பாரதிராஜா தலைவராகப் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தில்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு எதிராகக் களம் காண்கிறது சங்கரதாஸ் சுவாமிகள் அணி. அதில் தலைவர் பொறுப்புக்கு இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். விஷாலுக்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குரல் கொடுத்துவரும் பாரதிராஜா நடிகர்கள் சங்கத்தில் பாக்யராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, “சாதிக்க வேண்டும் எனத் தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலில் என் சிஷ்யர் பாக்யராஜ் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவருக்குச் செயல்திறன், அறிவு, ஆற்றல் உண்டு. நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு வருவதற்கான முழுத்தகுதியும் உள்ளவர் பாக்யராஜ்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon