மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழக் குழிப்பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழக் குழிப்பணியாரம்

பசி போக்கும் பழந்தமிழ் உணவு

நெய்யில் சுட்ட பணியாரம் - இது

நேர்த்தியாய்ச் சுட்ட பணியாரம்

பையப் பையக் கடித் துண்பதற்கும் - வெகு

பக்குவமான பணியாரம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நாவூறச் செய்யும் பாடல் வரிகள் இது.

சென்ற நூற்றாண்டில் செழுமை பெற்ற உணவல்ல பணியாரம்; சங்க காலத்திலேயே நம் முன்னோர்களின் பசி போக்கிய பழந்தமிழ் உணவு.

என்ன தேவை?

பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப்

உளுத்தம் பருப்பு – கால் கப்

ஜவ்வரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

கோதுமை மாவு – கால் கப்

உடைத்த வெல்லம் – அரை கப்

ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

முந்திரி – 5 (உடைத்துக்கொள்ளவும்)

உப்பு – ஒரு சிட்டிகை

நன்கு மசித்த வாழைப்பழம், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சரிசி, ஜவ்வரிசி, புழுங்கலரிசி சேர்த்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து மூன்று மணிநேரம் ஊறவிடவும். முதலில் உளுந்தை நன்கு பொங்க அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து அரிசிக் கலவையை மாவாக அரைத்து உளுந்துடன் சேர்க்கவும். அரைத்த மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகக் கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்துக் கரைக்கவும். வெல்லம் பாகு ஆறிய பிறகு புளிக்கவைத்த மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த் தூள், நன்கு மசித்த வாழைப்பழம், முந்திரி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி, மூடிபோட்டு வேகவைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

என்ன பலன்?

வாழைப்பழம் பல சத்துகளைத் தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமையில் கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்துகள் அதிகம். இந்தப் பணியாரம், நீர்ச்சத்துக் குறைபாட்டை நீக்கி, மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கும்.

நேற்றைய ரெசிப்பி: கருப்பட்டி குழிப்பணியாரம்


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!


முகிலன் இருக்கிறார்!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


செவ்வாய், 11 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது