மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

கவனக்குறைவு: உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?

கவனக்குறைவு: உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே மப்பேடு- கேம்ப் ரோடு சாலையில் நேற்று காலை அதிவேகமாக சென்ற மாருதி ஈகோ கார், சாலையின் ஓரம் இருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதி முன்னாள் சென்று கொண்டிருந்த இரு இருசக்கரவாகனங்களின் மீதும் மோதி நிற்காமல் சென்றது. அந்த இரு சக்கர வாகனங்களும் தூக்கி வீசப்பட்டதில் அதில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை அதிகாரியான குரோம்பேட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய காரை இயக்கியது 18 வயது நிரம்பாத பள்ளி மாணவன் என்று கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த காரை இயக்கியது 54 வயதுடைய, மப்பேடு பகுதியைச் சேர்ந்த வரதன், என்பதும் குடிபோதையில் காரை இயக்கியதும் தெரியவந்துள்ளது. அவர் கட்டுமான பணிகளுக்கான செண்ட்ரிங் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்று (ஜூன் 10) காலை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன், இந்த சம்பவம் தொடர்பாகப் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதாவது, அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி, இதுபோல் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுபோன்று விபத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்குச் சிறைத் தண்டனையை 2 ஆண்டுகளிலிருந்து, 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட நிலையில், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon