மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

அஜித் படத்திலிருந்து விலகிய அக்‌ஷய்

அஜித் படத்திலிருந்து விலகிய அக்‌ஷய்

வீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து விலகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

அஜித் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை இந்தியில் உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

’லொல்’ (LOL – Land Of Lungi) என்ற பெயரில் ஃபர்ஹத் சாம்ஜி இயக்குகிறார். அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் ஒப்பந்தமான நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படக்குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ராஸி படத்தின் மூலம் பிரபலமான விக்கி கௌஷல் இணைந்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர சூர்யாவன்ஷி, தி எண்ட் ஆகிய படங்களிலும் அவர் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் லொல் படத்திலிருந்து விலகுவதாக தயாரிப்பாளர் சஜித்திடம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாய்ப்பு விக்கி கௌஷலுக்கு சென்றுள்ளது.

மேலும் தமன்னா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon