மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

நடிகர் சங்கத்திற்கு மட்டும் போர் வந்திருக்கு: அப்டேட் குமாரு

நடிகர் சங்கத்திற்கு மட்டும் போர் வந்திருக்கு: அப்டேட் குமாரு

இரண்டு வரியில மடிச்சு மடிச்சு காமெடியா கலாய்ச்சு டிவிட்டர்ல ஸ்டேட்டஸ் போட்டுகிட்டு இருக்கோம். ஆனா ஒரு வரி வசனத்துல காமெடியா கலாய்ச்சு நினைச்சு நினைச்சு சிரிக்கவைச்சவர் கிரேஸி மோகன். இன்னைக்கு அவர் எழுதிய வசனங்களை எல்லாம் எடுத்து டிவிட்டர், பேஸ்புக்ல ஸ்டேட்டஸா வச்சிகிட்டு இருக்காங்க நெட்டிசன்ஸ். பலர் வீடியோக்களை ஷேர் பண்ணிகிட்டு இருக்காங்க. இதெல்லாம் கரெக்டா பண்றவங்க இறந்துட்டாருன்னு நியூஸ் வர்றதுக்குள்ள ஆர்.ஐ.பி போட்டு டிரெண்டாக்கிட்டாங்க. அப்டேட்டை பாருங்க. யாரு ஆர்ம்பிச்சு வச்சதுன்னு பார்த்துட்டு வாரேன்.

@Kozhiyaar

பெரும்பாலும் அலாரம் வைப்பது எழுவதற்காக அல்ல,

என்ன மணி என்று கண் விழிக்காமல் தெரிந்து கொள்வதற்கே!!!

@Shan Karuppusamy

யாரையும் திருத்துவது நமது வேலையல்ல என்று முடிவு செய்யும் நொடியிலிருந்து நமது வாழ்வில் தொலைந்திருந்த சமாதானமும் அமைதியும் மீண்டும் கிடைத்துவிடுகின்றன.

@manipmp

ஒருத்தரோட பயம்தான் இன்னொருத்தருக்கு தைரியம்-(மகளிர் மட்டும்)

-கிரேஸி மோகன்

@yaar_ni

தமிழகத்திலும் பாஜக தனது கொடியை ஏற்றும் - பிரதமர் மோட

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

@shivaas_twitz

டிவியில வர்ற எண்ணெய் விளம்பரத்தை பார்த்துட்டு பூரி சாப்பிடணும் போல இருக்குன்னு சொன்னேன்...

உடனே நாலு பூரி போட்டாங்க

கல்யாண மாலை நிகழ்ச்சி பார்த்துட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணணும் போல இருக்குன்னு சொன்னேன்...

பூரிக்கட்டையாலே நாலு போட்டாங்க

@sultan_Twitz

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன் #

எப்பபாரு அடுத்தவன் சைக்கிள்ளையே டபுள்ஸ் ஏறிக்குறிங்களே எப்போ உங்க சொந்த சைக்கிள்ல சவாரி செய்ய போறீங்க..?!

@mohanramko

நமக்கு சாப்பிட பிடிக்காதது எல்லாம், நம் உடலுக்கு நல்லதாக இருப்பதுதான் வாழ்வின் டிசைன்

@laksh_kgm

ஓட்டைப் பிரித்தவர்கள் இப்போது தொகைகளைப் பிரித்துக் கொண்டிருப்பார்கள். அவரவர் பணி செவ்வனே நடக்கும்.

இதில் ஏமாந்ததெல்லாம் மக்களும் ,ஜனநாயகமும்தான் !

@mohanramko

இந்தி பயின்றால் வடமாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கவும், வாசிக்கவும் உதவும் - ஆளுநர்

நாங்க ஏன்யா நடுராத்திரியில சுடுகாட்டுக்கு போகப் போறோம்?

@sultan_Twitz

தமிழிசை முன்னே பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட அவரது மகன் - செய்தி #

என்னக்கா... வீட்டுக்குள்ளையே தாமரை மலராது போல..

@Thaadikkaran

டிவி ஓடிட்டு இருக்கும்போது மறைச்சு நிக்குறதுக்குன்னே எல்லார் வீட்டுலயும் ஒரு ஆள் இருப்பாங்க..!!

வெரிஃபைட்

@mohanramko

நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார் - பாக்யராஜ்..

நடிகர்சங்கத்திற்கு மட்டும் போர் வந்திருக்கு போல...

@RahimGazzali

அதிர்ஷ்டம் என்பது பார்சல் வாங்கிட்டு போன குஸ்காவில் சிக்கன் பீஸ் கிடப்பதுதான்.

@amuduarattai

வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை என்பது போய்,அதை இப்போது, புண்ணியம் என்ற லிஸ்டில் சேர்த்து விட்டோம்.

@manipmp

நல்லாபேசிட்டு இருக்கும் போது சட்டுனு லவ் லெட்டர் கொடுப்பதுமாதிரி தான்..

திடீர்னு விசிட்டிங் கார்டு கொடுப்பதும்

@19SIVA25

அதிமுகவினர் 'கப்சிப்' என்ற இருக்க வேண்டும் - ஜெயக்குமார்

ஆனா நீங்க மட்டும் மெயின் ரோட்டுக்கு வர சொல்லுவீங்க

@Annaiinpillai

ஹர்பஜன் சிங் தமிழ் டிவிட்ட நினைச்சு சந்தோசபடுவதா! இல்லை ஸ்ரீகாந்த் தமிழ் கமெண்ட்ரிய நினைச்சு வருத்தப்படுவதானே தெரியலட சாமி!

@amuduarattai

தமிழ் நாட்டில் குட்கா, பான் மசலாவுக்கு முழுமையாக தடை விதித்தால், பாதி வட இந்தியர்கள், தமிழ் நாட்டை காலிபண்ணிட்டு போய் விடுவார்கள்.

@Annaiinpillai

ஞாயிற்றுக்கிழமை டிவியில் கிரிக்கெட் மேட்ச் ஒரு பக்கம் ஓட மனைவிக்குப்பிடிச்ச படம் இன்னொரு பக்கம் ஓடினால் இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் பார்க்கும் விறுவிறுப்பு வீட்டிற்குள்ளேயே அரங்கேறுவது டிசைன்!

@selvachidambara

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பதற்கு முன் சீப்பை எடுத்து தலையை வாரிக்கொள்வார்கள்.இப்போது மூச்சை உள்ளே இழுத்து தொப்பையை சுருக்கிக்கொள்கிறார்கள்!

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon