மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

இலவச இட ஒதுக்கீடு: மாணவர்களுக்கான அரசின் நிதி குறைப்பு!

இலவச இட ஒதுக்கீடு: மாணவர்களுக்கான அரசின் நிதி குறைப்பு!

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்காக 25 சதவிகித இலவச இடஒதுக்கீட்டு இடங்களுக்கான அரசு வழங்கி வரும் நிதி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். இச்சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியைத் தமிழக அரசு பாதியாகக் குறைத்துள்ளது. முன்னாள் பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் நிர்ணயம் செய்திருந்த தொகையைப் பாதியாகக் குறைத்து தற்போதைய முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். அதாவது, முன்னதாக குறைந்த பட்சமாக ரூ. 25,385ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 25,655 வழங்கப்பட்டு வந்தது. இவை தற்போது குறைக்கப்பட்டு குறைந்தபட்சமாக ரூ. 11,719ம் அதிகபட்ச தொகையாக ரூ.11,960ம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தற்போதைய சூழலில் பள்ளிகளில் அதிகளவு கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளன.

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வசதி இல்லை என்கிற காரணத்தில்தானே ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அதனை உணராமல், ‘எடுத்தோம்; கவிழ்த்தோம்’ என்று அரசு நடந்துகொண்டால், அவர்களால் எப்படி கட்டணத் தொகையைச் செலுத்த இயலும்.

இதனால் அந்தக் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதா? கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முடிவினை மக்கள் விரோத பழனிசாமி அரசு உடனடியாகக் கைவிட்டு, இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon