மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

ரிலீஸுக்கு தயாரான 7ஜி ரீ மேக்!

ரிலீஸுக்கு தயாரான 7ஜி ரீ மேக்!

2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் ரவிகிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒடியா போன்ற பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்துள்ளார்.

மங்கேஷ் ஹடவலே இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலமாக, பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜாவேத் ஜெப்ரியின் மகன் மீஷான் ஜெப்ரி, கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘மலால்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அறிமுக நடிகை ஷர்மின் சேகல் கதாநாயகியாக நடித்துள்ளார்.

டி சீரீஸின் பேனரில், பன்சாலி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும், இந்த படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘7ஜி ரெயின்போ காலனி’, திரைப்படத்திலிருந்து சில மாற்றங்களுடன் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது. தற்போது, இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஐலா ரே’என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை, விஷால் தத்லானி பாடியுள்ளார். பிரஷாந்த் இன்கோலால் எழுதப்பட்ட பாடல் வரிகளுக்கு, சஞ்சய் லீலா பன்சாலி இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடல், இணையத்தில், ஆறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 40 ஆயிரம் லைக்குகளையும், 10 ஆயிரம் டிஸ்-லைக்குகளையும் இந்த பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.


மேலும் படிக்க


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி


முகிலன் இருக்கிறார்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon