மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

அரபிக் கடலில் புயல்: தமிழகத்தில் மழை?

அரபிக் கடலில் புயல்: தமிழகத்தில் மழை?

அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக வலுப்பெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 8) தென்மேற்குப் பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று (ஜூன் 10) காலை 5.30 மணியளவில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது லட்சத்தீவுகளில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து 840 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், 24 மணி நேரத்தில் புயலாகவும் இது மாறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அடுத்த 72 மணி நேரத்தில் இது வடக்கு – வடமேற்குத் திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் நாட்களில் கேரளத்தில் பெருமழை முதல் மிகப்பெருமழை வரை பொழியும் வாய்ப்புள்ளது. வரும் 12ஆம் தேதியன்று மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் பெருமழை இருக்குமென்று கூறப்படுகிறது. இந்த புயல் வலுவடைந்தால் கேரளம், லட்சத்தீவுகள், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள், கொங்கன் மற்றும் கோவா பகுதிகள், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் பெருமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் அறிவிப்பினால் கேரளத்தில் உள்ள பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கேரளம், கர்நாடகா கடற்கரைப் பகுதிகளை நோக்கி வடமேற்குத் திசையில் நகரும் இந்த புயலினால் தமிழகம் மழை பெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon