மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

கோயில்களில் வாகனக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

கோயில்களில் வாகனக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

அனுமதியின்றி கோயில்களில் வாகனக் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த பெரிய பாளையம் பவானியம்மன் கோயிலில் மாயாண்டி என்பவர் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து சேதுராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கோயில் நிர்வாக அனுமதியின்றி சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய ஒப்பந்தம் இல்லாமல் கோயில்களில் வாகனக் கட்டணம் மற்றும் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமாகும். எனவே அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் நிர்வாக அனுமதி இன்றி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக 12 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள நீதிமன்றம் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வாகனக் கட்டணம் வசூலிக்க உரிய முறையில் ஒப்பந்தம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சுற்றுலா தலங்கள், கோயில்களில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon