மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவோம்: ராஜன் செல்லப்பா

தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவோம்: ராஜன் செல்லப்பா

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஜூன் 8 ஆம் தேதி கலகக் குரல் எழுப்பிய மதுரை முன்னாள் மேயரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, ‘யாராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்று இன்று (ஜூன் 10) பேசி மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மதுரை கைத்தறி நகரில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பேசிய ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமையில் இருந்து தலைமை என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

“திருப்பரங்குன்றத்தில் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டோம்., அதை விட்டுவிடுவோம். அதற்குப் பிறகு என்ன? வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றியாக வேண்டும். அவரா இவரா என்று போட்டி போட்டுக் கொண்டிருக்காமல் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் நிற்கிறார் என்ற விட்டுக் கொடுக்கும் நிலைக்கு நாம் வர வேண்டும்.

அம்மா நிறைய நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறார், எடப்பாடியும் நிறைய நலத்திட்ட உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். நம்முடைய நலத்திட்ட உதவிகள் போய் சேராத வீடுகளே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் நமக்குதானே வாக்குகள் வந்து சேர வேண்டும். நம்முடைய ஒற்றுமையால் அதை உறுதிப்படுத்த வேண்டும். இளைஞர்களை நிறைய கட்சிக்குள் கொண்டு வரவேண்டும்.

தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்து முடித்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரும் தலைமைக்குக் கட்டுப்பட்டு வெற்றிக்காக பாடுபடவேண்டும்” என்று பேசியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon