மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

சென்னை: தனியார் பள்ளியில் தீ விபத்து!

சென்னை: தனியார் பள்ளியில் தீ விபத்து!

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே தீ விபத்து ஏற்பட்டதால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் நாராயணா இ-டெக்னோ தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள புற்களில் இன்று (ஜூன் 10) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தின் அருகே பெரும்பாலான இடங்களில் தீ பரவியிருக்கிறது. இதனால் மாணவர்களுக்குக் கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு மாணவர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று குரோம்பேட்டை தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வாகனத்தில் வந்து மீட்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தனியார்ப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திலிருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், காய்ந்த மரங்கள் அங்கு இருந்ததால் தீ வேகமாகப் பரவியதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon