மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

யுவராஜ் சிங் ஓய்வு?

யுவராஜ் சிங் ஓய்வு?

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடும் தறுவாயில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இவரது பங்களிப்பு இல்லாமல் இந்திய அணியால் உலகக் கோப்பையை வென்றிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் யுவராஜுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே யுவராஜுக்கு அணியில் நிரந்தர இடம் இல்லாமல் போனது.

ஹர்திக் பாண்ட்யா, கேதார் ஜாதவ், அம்பத்தி ராயுடு போன்ற வீரர்களின் வருகையாலும், போதிய ஃபார்ம் இல்லாததாலும் யுவராஜ் சிங் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார். இனி இந்திய அணியில் யுவராஜ் இடம்பெறுவது மிகவும் கடினம் என்ற சூழலில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ’குட்-பை’ சொல்ல யுவராஜ் சிங் தயாராகியுள்ளார். அவர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவரும் யுவராஜ் சிங்கின் ஓய்வு முடிவை ஊடகங்களிடம் உறுதிசெய்துள்ளார். கனடா டி-20 மற்றும் யூரோ டி-20 கிரிக்கெட் தொடர்களில் யுவராஜ் சிங் விளையாடப் போவதாவும், அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வுபெற்றாலும், ஸ்டூவர்ட் பிராட் ஒவரில் அடித்த ஆறு சிக்ஸர்களையும், அவரது பறக்கும் கேட்ச்களையும், புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்து இந்திய அணிக்காக விளையாடிய தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியையும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியுமா?


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon