மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

ஹாரர் த்ரில்லரில் ஒரு ஆக்‌ஷன் படம்!

ஹாரர் த்ரில்லரில் ஒரு ஆக்‌ஷன் படம்!

சித்தார்த், கேதரின்தெரசா இணைந்து நடிக்கும் 'அருவம்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது

அரண்மனை 2, அவள் என்று தொடர்ந்து ஹாரர் திரில்லர்களில் நடித்து வரும் நடிகர் சித்தார்த், ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் இந்த படத்திலும் அதே ஹாரர் டிராக்கிலேயே பயணிக்கிறார். சித்தார்த் உணவு பாதுகாப்பு அதிகாரியாக வலம் வருகிறார். ஹாரர் அம்சங்கள் சில இடங்களில் வெளிப்பட்டாலும் ஆக்‌ஷன் நாயகன் போல் சண்டைக் காட்சிகளில் சித்தார்த் நடித்துள்ளார்.

உணவு கலப்படப் பிரச்சினை கதையில் முக்கிய பங்குவகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் தமிழைப் போல் தெலுங்கிலும் கவனம் பெற்றவர்கள் என்பதால் படம் அங்கும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் சேகர் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சவுந்தர்யா மற்றும் தீபா தயாரித்துள்ளனர்.

அருவம் டீசர்


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon