மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

அதர்வாவை வரவேற்கும் டோலிவுட்!

அதர்வாவை வரவேற்கும் டோலிவுட்!

அதர்வா தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வால்மீகி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருனாளினி நடிக்கிறார். இப்படம் 2014ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்காக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மதுரையை களமாகக் கொண்டு உருவாகியிருந்தது. சித்தார்த் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார்.

பாமி சிம்ஹா ஏற்று நடித்திருந்த அ.குமார் வேடத்தில் ரவி தேஜா நடித்துவருகிறார். ஏற்கெனவே இதன் படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது படக்குழு இதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கும் அதர்வாவை இதன் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் வரவேற்று பதிவிட்டுள்ளார்.

“இந்த தலைமுறையின் சிறந்த நடிகரான அதர்வாவை வால்மீகி திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகப்படுத்துவதை கௌரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மிக்கி ஜே மெயர் இசையமைக்கும் இப்படத்திற்கு அயங்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார். 14 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் ராம் அட்சந்தா, கோபி அட்சந்தா தயாரிக்கின்றனர்.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon