மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 மா 2020

ஆம்புலன்ஸ் விபத்து: 8 பேர் பலி!

ஆம்புலன்ஸ் விபத்து: 8 பேர் பலி!

விபத்துக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸும் லாரியும் மோதியதில் 8 பேர் பலியாகினர்.

பாலக்காடு மாவட்டம் தனிசேரி அருகே நேற்று (ஜூன் 9) மதியம் 2.30 மணியளவில் ஒரு ஆம்புலன்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் பட்டம்பி, ஷோரனூர், நென்மாறா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். இறந்தவர்கள் யாரென்று அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் இறந்தவர்கள் நெல்லியம்பதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அங்கிருந்து திரும்பும் வழியில், அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் சிறிய அளவில் சிலருக்கு அடிபட்டது. நென்மாறா எனுமிடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மேல்சிகிச்சை அளிப்பதற்காக, அவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் லாரியின் ஓட்டுநர் உயிர் பிழைத்துள்ளார்.

பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் \8 பேரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து, தனிசேரி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


முகிலன் இருக்கிறார்!


பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon