மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

பாஜகதான் அதிமுக தோல்விக்குக் காரணம்: சி.வி.சண்முகம்

பாஜகதான் அதிமுக தோல்விக்குக் காரணம்: சி.வி.சண்முகம்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அக்கூட்டணி தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, “அதிமுக இரண்டு தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐந்து தொகுதிகளில் தோல்வி கண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “பாஜக போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் 2 லட்சத்துக்குக் குறைவான வாக்கு வித்தியாசத்திலும், இரண்டு தொகுதிகளில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் மட்டுமே தோல்வி அடைந்தது. மோடி எதிர்ப்பு அலை வீசியிருந்தால் அனைத்துத் தொகுதிகளிலும் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியைச் சந்தித்திருக்கும். அப்படி என்றால், தமிழகத்தில் யாருக்கு எதிரான அலை வீசியது” என்றும் குருமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் பாஜகவால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்தோம் என்று நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார் சி.வி.சண்முகம். விழுப்புரத்தில் நேற்று (ஜூன் 9) செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணம் என்னவென்று சொன்னேன். தோல்விதான் என்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறோம். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் மட்டும் தோல்வியடையவில்லை. ஏன் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

பாஜக தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்பட்டதாகப் பொய்யான குற்றச்சாட்டை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இரண்டு ஆண்டுகளாகப் பரப்பிவந்தன. இதை பாஜக முறையாகக் கையாளவில்லை. அதனால்தான் இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற பாஜக தமிழகத்தில் தோல்வியைத் தழுவியது. பாஜக மீதான அதிருப்தி அதிமுகவையும் பாதித்தது. அதனால் தோல்வி ஏற்பட்டது. சிறுபான்மையினரின் வாக்குகளை முழுக்க இழக்க நேரிட்டது” என்று பதிலளித்தார். ஆனால், சிறுபான்மையினருக்குப் பாதுகாவலராக இருப்பது அதிமுகதான் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon