மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

நெஞ்சே எழு: அணியின் தோல்வியல்ல; மண்ணின் வெற்றி!

நெஞ்சே எழு: அணியின் தோல்வியல்ல; மண்ணின் வெற்றி!

-நரேஷ்

“அட்ச்சு ஆடுனாத்தான் ஜெயிக்கமுடியும். இங்க டிஃபெண்டெல்லாம் ஒத்துவராது. ஆனா இவிங்க இன்னான்னா டிஃபண்ட் பண்ணி ஆடுறாங்க. என்ன நடக்கப்போதுன்னு வைட் பண்ணி பாக்கணும்” என்று கமெண்ட்ரி ஒளிப்பெருக்கிகள் ஓதிக்கொண்டிருக்க, அனல் வெயிலில் கூட பரபரத்துக்கொண்டிருந்தது ஆட்டம். ஃபைனலில் நொச்சிக்குப்பம் அணியும் பட்டினம்பாக்கம் அணியும் மோதிக்கொண்டது. போட்டி நடந்தது பட்டினம்பாக்கம் கிரவுண்ட் என்பதால் அந்த அணிதான் ஜெயிக்கும் என்று எல்லோரும் கணித்திருந்தார்கள். ஏனென்றால், சிஸ்டம் அப்படி. எந்த குழு போட்டியை நடத்துகிறதோ அந்த குழுவின் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்கான எல்லா லாபிகளும் நடத்தப்படும் என்பது ஒவ்வொரு அணிக்கும் தெரிந்த ரகசியம். அத்தி பூத்தாற்போல் ஆங்காங்கே அதிசயமாக வேறு அணிகள் ஜெயிக்கும். ஆனால் வருண் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், பட்டினம்பாக்கம் மைதானத்தில் நொச்சிக்குப்பத்தின் அணி வெற்றிபெற்றது.

பட்டினம்பாக்கம் அணியின் கோச் கலைவாணன் விளையாட்டரங்கில் நடக்கும் அரசியலை அசால்ட்டாக வெளிப்படுத்தினார். “அது எங்க கிரவுண்டு. அம்பயரும் எங்க குரூப், எல்லாரும் எங்க ஆளுங்க. நாங்க நினைச்சிருந்தா எதாவது பண்ணி ஜெயிச்சிருக்கலாம். அது சாதாரணமா நடக்கும். ஆனா இந்த போட்டி ரொம்ப நேர்மையா நடந்துச்சு. எந்த சமரசமும் இல்லாம நடந்துச்சு. ஆர்கனைசர்ஸ்க்குத்தான் நாங்க நன்றி சொல்லணும். நாங்க இங்க காசுக்காக விளையாட வரலை. முழுமையா எங்க திறமையை வெளிப்படுத்தனும்னு நினைச்சு வந்தோம். நிறைவா விளையாடினோம். ஏன்னா, எண்ட்ரி ஃபீஸ் கட்டி விளையாடுறப்போ காசை திரும்ப எடுக்கனும்னு குறைந்தபட்ச ஆசையாவது இருக்கும். ஆனா இங்க எங்களுக்கு அப்டி எந்த பணம் சார்ந்த பிரச்னைகளும் இல்லை. விளையாடுறதுக்கு மட்டும்தான் வந்தோம். மத்த எல்லா பிரச்னைகளையும் வருண் அறக்கடளை பாத்துக்கிட்டாங்க. நல்ல பிரைஸ் மணியும் குடுத்திருக்காங்க. எங்க பசங்களுக்கு இது மிகப்பெரிய ஊக்கம். எங்க கிரவுண்ட் ரெடி ஆகியிருக்கு. வாங்குன பிரைஸ் மணியை வெச்சு எக்யூப்மெண்ட்ஸ் வாங்குவோம். அடுத்த டோர்னமெண்டுக்கு தயார் ஆவோம். இது மாதிரியான செயல்கள்தான் எங்க பசங்களை விளையாட்டுல அதிக கவனம் செலுத்த ஊக்குவிக்குது. வருண் அறக்கட்டளையோட செயல்கள் இதோட நிக்கபோறதில்லைங்கிறது, அவங்களோட நேர்த்தியான செயல்கள் மூலமா தெரிஞ்சது. வேற என்ன சொல்றது.. நன்றிதான் கடைசியா..!” என்று மனதார சிரித்து முடித்தார்.

ஆம், அம்மக்கள் சார்பாக வருண் அறக்கட்டளைக்கு நன்றி!

(முன்னேற்றம் தொடரும்)

விளம்பரக் கட்டுரை

நெஞ்சே எழு: மாற்றத்துக்கான தொடர்!


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon