மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

பள்ளி மாணவன் ஓட்டிச்சென்ற கார் விபத்து!

பள்ளி மாணவன் ஓட்டிச்சென்ற கார் விபத்து!

சென்னையில் தாம்பரம் அருகே அதிவேகத்தில் சென்ற கார் சீறிப் பாய்ந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோடு - மப்பேடு சாலையில் அதிவிரைவாக வந்த கார் ஒன்று சாலையிலிருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி, முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி தூக்கி வீசிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களில் பயணித்த கிளாட்சன் (18), விக்ரம் (18), ஆறுமுகம் (40) அவரது மனைவி சாந்தி (35) ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

இதில் கிளாட்சன் என்ற மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுமுகம் மற்றும் சாந்தி இருவரும் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதுதொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுநர் 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து தாம்பரத்தில் விபத்தை ஏற்படுத்திய அந்த கார் அம்பேத்கர் நகர் என்ற இடத்திலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4இன்படி, 18 வயதுக்கும் கீழுள்ளவர்கள் வாகனத்தை இயக்கக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon