மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

சாத்தியம் என்று சொல்லுங்கள்!

சாத்தியம் என்று சொல்லுங்கள்!

ஒரு கப் காபி!

உங்கள் லட்சியத்தை வெளிப்படையாக எழுதிவைப்பது முக்கியமானது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி. உங்கள் லட்சியத் திட்டத்தை வெளிப்படையாக எழுதிவையுங்கள். அதை உரக்கப் படியுங்கள். மன உறுதிப்பாட்டுடன் ஒருநாளைக்கு இரண்டு முறையாவது படியுங்கள். எதை மன உறுதியுடன் பேசுகிறீர்களோ... அது உங்களை நோக்கி வருகிறதா என்று பாருங்கள்.

இதை உரக்க வாசியுங்கள்:

"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"

மீண்டும் வாசியுங்கள்:

"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"

மீண்டும் வாசியுங்கள்:

"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"

இது மிகவும் எளிமையானது. உங்களால் முடியும் என்று நீங்கள் சொன்னீர்களானால்... உங்களால் முடியும். உங்களால் முடியாது என்று சொன்னால் முடியாது. உங்கள் உதடுகளிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

எந்த எதிர்மறையான எண்ணமும் உங்களைச் சிறையில் முடக்கும். எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகி இருங்கள். வெற்றிகரமான, நேர்மறையான, ஆற்றல்மிக்க மனிதர்களுடன் உறவை வைத்துக்கொள்ளுங்கள்.

இன்னொருவருக்குச் சாத்தியமாகும் ஒன்று எனக்கும் சாத்தியம்தான். நீங்கள்தான் அந்தச் சாத்தியம்!

சிகரத்தை எட்டுங்கள். ஆழ உழுதுகொண்டே செல்லுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். அது சாத்தியம் என்று சொல்லுங்கள்!

- ஜானி டி. விம்ப்ரே

நன்றி: From the HOOD To doing GOOD (தீரட்டும் வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து. வெளியீடு: சக்சஸ் ஞான்


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon