மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 25 பிப் 2020

சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: ஸ்டாலின்

சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: ஸ்டாலின்

சட்டமன்றக் கூட்டத் தொடரை உடனே கூட்ட வேண்டுமென ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் ஜூன் மாதம் சட்டமன்றம் கூடுவது வழக்கம். கடந்த வரும் மே 29ஆம் தேதியே மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி, அணு உலைக் கழிவு மையம் அமைப்பதற்குக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதும், தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்காதது, நீட் தற்கொலைகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் நிலவிவரும் இந்தச் சூழலில், இதுவரை மானியக் கூட்டத் தொடருக்கான அறிவிப்புகூட வெளியாகவில்லை.

இதுதொடர்பாக நேற்று (ஜூன் 9) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டுவதற்கே இந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது - அதிமுக அரசுக்கு ஆக்கபூர்வமான விவாதங்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் இந்த அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை என்று விமர்சித்த ஸ்டாலின், தற்போது இருக்கும் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். “தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறதா, இல்லையா என்ற நியாயமான கேள்வியைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர்,

தமிழ்நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினைகளை எல்லாம் விவாதிக்கவும், துறை சார்ந்த மான்யக் கோரிக்கைகள் பற்றி மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து நிதி நிலை அறிக்கையின் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளை வளர்ச்சித் திட்டங்களுக்கும், தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்திடவும் உடனடியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுகவின் உட்கட்சிப் பூசல் குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “தன்னைச் சுற்றி ஆளும்கட்சி உறுப்பினர்களே தொடுக்கும் கேள்விக் கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாகச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முதலமைச்சர் பயம் கொள்வாரானால், ஆளுநர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையைக் கூட்ட ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றம் கூட்டப்படுவதை மேலும் தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


மேலும் படிக்க


ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon