மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு

மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணிக் கட்சியினரோடு சேர்த்து திமுக 23 எம்.பி.க்களைப் பெற்று நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். ‘ஆறு மாதங்களுக்குப் பிறகு திமுக விரும்பினால் அமைச்சரவையில் இணைந்துகொள்ளலாம்’ என்று அவர்கள் டி.ஆர்.பாலுவிடம் அழைப்பு விடுத்ததாக தினமலர் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இதுபற்றி பதிலளித்து டி.ஆர்.பாலு இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று. அந்த நடைமுறைப் பழக்கப்படி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்.பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் திரு.அர்ஜீன்ராம் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்” என்று தெரிவித்தார்.

மேலும், “அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெரியப்படுத்தினர். ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்ற தவறான செய்தி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது” என்று விமர்சித்தவர்,

மு.க.ஸ்டாலினின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஒளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon