மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

ரஜினிகாந்த்: ஒரு படம், ஒரு பாடம்!

ரஜினிகாந்த்: ஒரு படம், ஒரு பாடம்!

ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினிகாந்த், தனது பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது தற்போது இணையத்தில் வரவேற்பு பெற்று வருகிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

“எனது ஐ போனில் இருக்கும் ஒரே ஒரு கேண்டிட் புகைப்படம் இதுதான்” என்று குறிப்பிட்டு, தர்பார் பட கெட்டப்புடன், இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் அவர் குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய 'Rags to riches story' என்ற அந்தப் பாடத்தில் "பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர்ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார ஐகானாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்" என்று குறிப்பிட்டு அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


திங்கள், 10 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon