மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

ஒற்றை தலைமை: அதிமுக அவசர ஆலோசனை!

ஒற்றை தலைமை: அதிமுக அவசர ஆலோசனை!

ஒற்றை தலைமை தொடர்பான விவாதம் எழுந்துள்ள நிலையில், அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது அதிமுக தலைமைக் கழகம்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவில் இரு தலைமைகள் இருப்பதால் உரிய நேரத்தில் உரிய முடிவெடுக்க முடிவதில்லை என்றும், ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்தையும் முன்னிறுத்தியிருந்தார். இதற்கு குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒற்றை தலைமை தொடர்பான விவாதம் அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக தலைமைக் கழகம் இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழோடு கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின்போது ஒற்றைத் தலைமை குறித்து காரசார விவாதம் நடைபெறும் என்று கூறுகிறார்கள்.


மேலும் படிக்க


பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


ஞாயிறு, 9 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon