மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!

செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!

ராகுல் ஹஜாரே

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலைச் சேர்ந்த ராகுல் ஹஜாரே தலைமையிலான ஆய்வுக் குழு ஒரு ஆய்வை மேற்கொண்டு அது தொடர்பான முடிவுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான சுருக்கம் கீழே தரப்படுகிறது. குழந்தைப் பேறில்லாத இந்திய தம்பதிகள் உச்சகட்டம் அடைவது குறித்தும், செக்ஸுவல் இன்பங்களைப் பெறுவது குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களின் செக்ஸ் திருப்தி, உச்சகட்டம் பற்றி மிகக் குறைவான அளவிலேயே நமக்குத் தெரிய வந்துள்ள நிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு ஏன்? - அறிமுகம்

மருந்து நிறுவனங்களில் இருந்து மருத்துவமனை, கல்லூரி மற்றும் இதர வகைகளில் கிடைத்த மாதிரிகளைக் கொண்டு இதற்கு முந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனை மாற்றும் வகையில், தேசிய அளவில் இளம் பெண்களிடம் ராகுல் ஹஜாரேயின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செக்ஸுவல் இன்பம் மற்றும் உச்சகட்டம் குறித்த பெண்களின் புரிதல் குறித்து ஆய்வாளரின் குழு விவரங்களைக் கேட்டறிந்தது. திரட்டப்படும் தகவல்களில் நிகழும் தவறுகள் குறித்து இந்த ஆய்வு பல சவால்களை எழுப்பியது. ஆனால், உலகளவில் செக்ஸ் குறித்த விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்குமென்ற கருத்து பரவலாக உள்ளது. அதே நேரத்தில், பெண்களுக்குச் சில விதமான தொடுதல்களில் மிகவும் விருப்பம் இருந்தது பற்றி தரவுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. செக்ஸுவல் பிரச்சினைகளைப் பற்றி அல்லாமல் செக்ஸுவல் இன்பம் குறித்து மட்டுமே ஆய்வு செய்யப்படுவது குறித்தும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 50க்கும் அதிகமான பெண்கள் பிறப்புறுப்பில் தொடுதல், உணர்வைத் தூண்டும் பகுதிகள், அழுத்தம், வடிவம் மற்றும் செக்ஸ் கொள்ளும் முறைகள் குறித்து பல்வேறுவிதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த பெண்கள் 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் சிலர் கணவரை இழந்தவர்களாகவும் இருந்தனர். 41 சதவிகித பெண்கள் குறிப்பிட்ட வகை தொடுதலை மட்டுமே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தங்களது விருப்பங்கள், ஆசைகள் குறித்து கணவருடன் உரையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உறவின்போது உச்சகட்டம் அடையும் வழிகள் குறித்து, இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது. சுமார் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் பெண்ணுறுப்பின் நுனி (Clitoris) தூண்டப்படுவது உறவின்போது உச்சகட்டத்தை வரவழைக்கவும், உச்சகட்டம் அடைய உதவி செய்யவும் காரணமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 18 சதவிகிதம் பெண்கள் பெண்ணுறுப்பின் வழியாக உறவு கொள்வதன் மூலமாக மட்டுமே உச்சகட்டம் அடைவதாகவும், உறுப்பின் அளவு மற்றும் உயரம் இதற்குக் காரணமாக உள்ளது என்றும் கூறியதாகத் தெரிவித்துள்ளது ஆய்வுக் குழு.

தொடரும் செக்ஸ் திருப்தி

செக்ஸில் ஈடுபடுவதற்கான நேரத்தை அதிகப்படுத்திக்கொள்வது மிக முக்கியமானது. நல்ல செக்ஸ் அனுபவம் தரும் நன்மைகளுள் ஒன்று அதன் தாக்கம் 12 மணி நேரம் உங்களிடம் இருக்கும். மகிழ்ச்சியில் திளைத்திருக்கவும், பணியாற்றும் இடத்தில் சிறப்பாக இருக்கவும் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், இந்த ஆய்வின்படி நீங்கள் படுக்கையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

வீட்டில் சிறப்பாக உறவு கொண்ட திருப்தியை அடைந்தவர்கள், அடுத்த நாள் அலுவலகப் பணியில் சிறப்பாக இருந்து வருவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. புனே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களை பொறுத்தவரை மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை என்பது பணி திருப்திக்கு வழிவகுக்கும். சுத்தமான குடிநீர், சுத்தமான கழிவறைகள், சுத்தமாக ஆய்வகக் கழுவுமிடம், சுத்தமாக ஆடையணிவது, போதுமான குடிநீர் வசதி, வகுப்பறையில் போதுமான வெளிச்சம், வாழ்க்கைக்கும் பணிக்கும் இடையிலான சமநிலை போன்றவை இந்த பணி திருப்தியில் அடங்கும். பணியாற்றும் இடத்தில் குதூகலமாகவும் திருப்தியாகவும் இருப்பதோடு, எடுத்துக்கொண்ட சவால்களில் மூழ்குவதால் இவ்வாறு இருப்பவர்கள் தங்களது வேலையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

“தங்களது செயல்பாடுகளில் முன்னேற்றம் கண்டதாகச் சொல்லும் மனிதர்கள் குறித்து கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுதான் மிக முக்கியமானது. அதில், நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் ராகுல் ஹஜாரே.

செக்ஸ் உறவின்போது ஏற்படும் தூண்டுதல்களால் இடைநிலை டோபமைன் வெளியாகிறது. இது சிறுமூளையுடன் தொடர்புடைய நியூரோட்ரான்ஸ்மீட்டர்களோடு இணைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், சமூக பிணைப்பு மற்றும் நெருக்கத்துக்குக் காரணமான நியூரோபெப்டைடுடன் இணைந்திருக்கும் ஆக்சிடோசின்களும் அப்போது வெளிப்படுகின்றன. செக்ஸின் மூலமாகச் சுமார் 12 மணி நேரம் மகிழ்ச்சியான மனநிலை வாய்க்கிறது. இதனால், வாரம் முழுவதும் பணிகளைச் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது.

அலுவலகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுவரும் திருமணமான பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணியிடத்தில் அவர்களது செயல்பாடுகளும், இணை உடனான அவர்களது செக்ஸ் பழக்கங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. வீட்டில் தனது இணையுடன் உறவு வைத்துக்கொண்டவர்கள், உறவு கொள்ளாதவர்களை விட அலுவலகப் பணியில் சிறந்து விளங்குவது கண்டறியப்பட்டது. இதன் மூலமாக நலமான உறவைப் பேணுவதன் வழியாக ஆரோக்கியமான பணி மேம்பாடு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நீடித்த மகிழ்ச்சியுடனும், பணியிடத்தில் முழு ஈடுபாட்டுடனும் இருப்பர்.

இதன் மூலமாகப் பணியிடத்தில் செக்ஸ் குறித்த தேடல் குறைவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் பணியாளர்களும் நலன்கள் பலவற்றை எதிர்கொள்ள வழிகள் உண்டாகும். அதே நேரத்தில், வேலைக்காக செக்ஸை தியாகம் செய்வதால் மனதளவில் நன்மையளிக்கும் காரணி குறைவாகவே இருக்கும். இதனால் தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு, கண்ணுக்கு அடியில் இருள் சூழும். “சமூகரீதியாக, உணர்வுரீதியாக, உடல்ரீதியாகப் பலன்களைப் பெற வேண்டுமானால் செக்ஸ் முக்கியம் என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். அதனால், அதற்கு நேரம் ஒதுக்குங்கள்” என்கிறார் ராகுல் ஹஜாரே.

உயரம் ஏற்படுத்தும் தாக்கம்

இந்த ஆய்வின்போது குழந்தையில்லாத தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, ஆண்களிடத்தில் விந்தணு சீர்கெட்டிருப்பது கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாகவே, குழந்தையின்மைக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவற்றில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்கள் இதற்கான பதிலைக் கண்டுபிடித்துள்ளனர். அது உயரம் குறைவானவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உயர வேறுபாட்டுக்கும், இதற்கு முன்னர் இருந்த செக்ஸ் இணைகளின் எண்ணிக்கைக்கும் இடையே தொடர்பிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். அதேபோல, உயரம் அதிகமான ஆண்கள் அதிக செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சராசரியைவிடக் குறைவான உயரமுள்ள ஆண்கள் ஒன்று முதல் 3 செக்ஸ் இணைகளைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. உயரமான ஆண்கள் இவ்வாறு இருப்பதில்லை. ஆனால், கடைசியாக உறவு கொண்ட காலத்தைக் கணக்கிடும்போது உயரம் குறைவான ஆண்கள் பின்தங்கியுள்ளனர். சந்தையில் செக்ஸுக்கு உயரம் அவசியம் என்று சொல்லப்படுவதற்கான காரணங்களில் இவை அடங்கியிருக்கலாம்.

ஆண்களை ஒப்பிடுகையில், பெண்களுக்குச் சராசரியான உயரத்தை நிர்ணயிக்கின்றனர் சந்தையியலாளர்கள். ஆய்வாளர்களும் கூட பெண்கள் தங்களைவிட உயரமான ஆண்களையே விரும்புவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றனர். தொடக்கநிலையில் குறிப்பிட்ட காலம் வரை பெண்கள் உயரத்தைக் கணக்கிடுகின்றனர். அதன்பின்னர் தனது இணையின் செக்ஸ் செயல்பாட்டை மட்டுமே மதிப்பிடுகின்றனர். இதனாலேயே, உயரமான ஆண்கள் அதே அளவிலான இணைகளையே பெரும்பாலும் கொண்டுள்ளனர்.

அதேபோலப் பெண்களை நோக்குகையில், சராசரிக்கும் குறைவான எடையுள்ள பெண்கள் மற்ற பெண்களை விட குறைவான இணையுடனே செக்ஸ் கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. நிறைய வாய்ப்புகள் இருந்தும், குறைவான எடை கொண்ட பெண்கள் அதிக ஆண்களிடம் விருப்பம் கொள்ளாதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஆய்வாளர் ராகுல் கஜாரே . தங்களது எடையில் அதிருப்தியற்று இருப்பதாலும், அனெரெக்ஸியா போன்ற நோய்களால் அவதிப்படுவதாலும், தங்களது உடலமைப்பை வெளிக்காட்ட இம்மாதிரிப் பெண்கள் தயாராக இல்லாததாலும் இந்த நிலை உருவாகிறது. கூடுதலாக, குறைவான எடையுள்ள பெண்களிடையே அதிகளவில் இறப்பு விகிதம் உள்ளதும், இவர்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாலேயே எடைக்குறைவு ஏற்படுவதும் ஆய்வுக்குரியது. நிறைய உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாலேயே, இவர்கள் குறைந்த அளவிலான செக்ஸ் இணை கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது என்கிறார் ராகுல்.

செக்ஸும் சர்க்கரை குறைபாடும்

செக்ஸ் மற்றும் டயபட்டீஸ் இரண்டுமே உடல்நலம் தொடர்புடைய சூழலை விளக்கும் இரு வேறு அம்சங்கள். டெஸ்டோஸ்டீரான இனங்கள் எல்லாமே கன்னித்தன்மையை இழப்பதற்கான வழியாக ஒரு தோல் பரப்பை வைத்திருக்கின்றன. ஒற்றை மையம் வழியாக நிலைகொள்ளுதல் தொடங்கி, அந்த விளையாட்டு வெவ்வேறு திசைகளுக்கு நீள்கின்றன. செக்ஸின்போது பெண்களின் முதுகுப்புறத்தில் உள்ள 650 நரம்புகள் தூண்டப்பட்டு, ஆணைவிட பெண் அதிக மகிழ்ச்சியை அடைகிறார். மிக எளிதான செக்ஸ் பிதற்றலை அடைபவர்கள் குறைவான சக்தியைக் கொண்டவர்களாகவும், சமமற்ற கன்னித்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். நீண்டநேரத்தை எடுத்துக்கொள்பவர்கள் இதனை அனுபவிக்க நீளும் விளையாட்டையே நாடுகின்றனர். செக்ஸில் ஈடுபடுவதில் தொடங்கி அது பலவாறாகச் சிதறும் வரை, மகிழ்ச்சியை உணரும் தேடலில் சிறந்த விந்தணு கொண்டிருப்பவரைத் தேர்ந்தெடுப்பது முதலாகப் பெண்கள் உச்சகட்டத்தை அடைய நான்கு வகையான மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

செக்ஸ் இன்பத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே கருதப்படுபவற்றை விடப் பெண்கள் பல்வேறு வகைகளில் விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த ஆய்வில் தெரிய வரும் முடிவுகளுள் இதுவே முக்கியமானது என்கிறார் ராகுல் ஹஜாரே.

நன்றி: கிரிம்சன் பப்ளிஷர்ஸ்

தமிழில்: உதய் பாடகலிங்கம்


மேலும் படிக்க


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மோடி முதல் பயணமாக மாலத்தீவு சென்றது ஏன்?


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


ஞாயிறு, 9 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon