மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜுன் 2019

தான் பிறந்தபோது உடனிருந்த செவிலியரைச் சந்தித்த ராகுல்

தான் பிறந்தபோது உடனிருந்த  செவிலியரைச் சந்தித்த ராகுல்

மக்களவைத் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் பிறந்த போது தன்னை முதலில் தூக்கிய செவிலியரைச் சந்தித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது எதிர்க்கட்சிகள் இரட்டை குடியுரிமை புகார் அளித்தன. ஆனால் அவர் இந்தியாவில் தான் பிறந்தார் என்பதற்கு ஆதாரமாகக் கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற செவிலியர் ராஜம்மா(72), ராகுல் காந்தி பிறந்த போது அவரை முதன் முதலில் என் கைகளால் தான் தூக்கினேன் என்று கூறியிருந்தார்.

1970ஆம் ஆண்டு, டெல்லியில் உள்ள ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் பணியாற்றினேன்.அந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பணியில் இருந்த போது ராகுல் காந்தி பிறந்தார். குழந்தையாக இருந்த அவரை என் கையில் ஏந்தினேன் என ராஜம்மா கூறியிருந்தார்.

சோனியா காந்தி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை புகார் சுமத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அவர் டெல்லியில் தான் பிறந்தார் என்பதற்கான ஆதாரம் அந்த மருத்துவமனையில் இருக்கும். ராகுல் காந்தி அடுத்த முறை வயநாட்டிற்கு வரும் போது அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, தன்னை குழந்தையாக இருக்கும்போது கையில் ஏந்திய ராஜம்மாவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பழைய நினைவுகளை ராஜம்மா பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ராகுல் காந்தியைக் கட்டியணைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களைக் கேரள காங்கிரஸ் நிர்வாகி ரமேஷ் சென்னிதலா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!


மோடி முதல் பயணமாக மாலத்தீவு சென்றது ஏன்?


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

ஞாயிறு 9 ஜுன் 2019