மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜுன் 2019

நெஞ்சே எழு: இழப்பில்லாத வெற்றியின் பலன்!

நெஞ்சே எழு: இழப்பில்லாத வெற்றியின் பலன்!

நரேஷ்

பட்டினப்பாக்கம் ஆர்.டி.ஓ கிரவுண்டு வழியாக இரவு நேரங்களில் செல்ல அச்சப்படுவார்கள். புதர் நிறைந்த அப்பகுதியும், பாழடைந்த பள்ளியும் குடிமகன்களின் குடியிருப்புகளாக மாறிப்போயிருந்ததுதான் அதற்குக் காரணம். ஒரே ஒரு கால்பந்துக் குழுவின் வருகையினால், தனது கடைசி மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டிருந்தது அந்த கிரவுண்டு. ஒருபுறம் கான்கிரீட் கழிவுகளும், மறுபுறம் முள் செடிகளும், இருபுறமும் புதர்களும் நிறைந்த அப்பகுதியில் ஒரு கிரிக்கெட் டோர்னமென்ட் நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. அதுவும் ஆடம்பர அணிகள் ஏதும் இல்லாமல் குப்பத்து மக்களுக்காக மட்டும் நடக்கும் போட்டி அது என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற ‘டோர்னமென்டுகள்’ பொதுவாக பணத்துக்காகவோ அல்லது பெருமைக்காகவோ நடத்தப்படும். ‘பெட் கட்டி’ விளையாடுவது என்பது பிரசித்தி பெற்றிருக்கும் அப்பகுதியில் திறமைக்காக மட்டும் நடத்தப்படும் போட்டி இது என்று அங்கு விளையாட வந்தவர்கள் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள்.

வருண் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பங்குபெற்றிருந்த அனைத்து அணியினரும் ஓரணியாகச் சேர்ந்து பாராட்டிய விஷயம் ‘ஒருங்கிணைப்பு’ (Organizing). இதுவரை அவர்கள் கண்டிராத ஒழுங்குடன் அந்தப் போட்டி நடந்ததாக மெய்சிலிர்த்தனர். “ஒரு புரொஃபஷனல் டீம் மேட்ச் எப்படி நடக்குமோ அப்படி நடத்துறாங்க தல. இவ்ளோ நீட்டா பிட்ச் ரெடி பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு பிரேக்லையும் தண்ணி, ஜூஸ்னு எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடுக்குறாங்க. பர்ஃபெக்டா டைம் மெயின்ட்டைன் பண்றாங்க. ஜெர்சி அடிச்சு குடுத்திருக்காங்க. நல்ல ப்ரைஸ் மணி. அருமையான கப், ஸ்டேஜ். என்ட்ரி ஃபீஸ் ஏதும் வாங்கலைன்னா பாருங்க. கிரவுண்ட் மெயின்ட்டனன்ஸ்னு இன்னும் சொல்லிட்டே போகலாம்!” என்று சிலாகித்தார் நொச்சிக்குப்ப அணியில் விளையாடிய பொற்செல்வன்.

அனுபவித்திராத ஒரு மரியாதையை அடைந்தது போன்ற உணர்வை அவர் முகத்தில் காண முடிந்தது. இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கும் ஓர் இளைஞர் அணியினருக்கு உதவியாக அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தார். அஷ்வந்த் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துவிட்டு சமூகப் பணியில் ஈடுபாடுகொண்டு இங்கு வந்திருக்கிறார். அவரிடம் அரங்கத்தை அலங்கரித்தக் கதையைக் கேட்டோம். ஏனென்றால், அந்த ஊர் மக்களே கண்டுகொள்ளாத அந்த விளையாட்டு வளாகத்தை நிரந்தரமான மைதானமாக மாற்றும் அளவுக்குச் சுத்தம் செய்திருந்தார்கள் அவர்கள். “இந்த கிரவுண்டுக்கு வந்து பாத்தப்போ இது கிரவுண்ட் மாதிரியே இல்ல. இதை ஒரு ’பிட்ச்சா’ மாத்தணும்னா நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது. முதல்ல சுத்தியிருந்த முட்செடிகளை ஜே.சி.பி உதவியோட அப்புறப்படுத்தினோம். மணலா இருந்த இந்தப் பகுதியில பவுண்ஸ் ஆகாது. அதனால மணலை கொஞ்சம் சமன்படுத்தி, பவுலிங் பிட்ச்சை சிமென்ட் பூசி ரெடி பண்ணோம். இங்க வந்துட்டிருந்த ஃபுட்பால் டீமுக்காக ஒரு பெரிய Fence கட்டியிருக்கோம். ஏன்னா, ஒவ்வொரு தடவையும் புதர்ல ஃபுட்பால் சிக்கி பஞ்சர் ஆகிடுது. இல்லைன்னா அதை முள்ளுக்குள்ள போயி எடுக்குறது கஷ்டமா இருக்கு. இப்போ எந்த பயமும் இல்லாம அவங்களால விளையாட முடியுது. விளையாட்டைத் தவிர அவங்களுக்கு வேற எந்த நினைப்பும் வராத அளவுக்குப் பிரச்சினை இல்லாம பார்த்துக்கணும். தட்ஸ் இட்!”

“ஃபைனல் மேட்ச்சுக்கு நொச்சிக்குப்பம் டீமும் பட்டினப்பாக்கம் டீமும் செலெக்ட் ஆகியிருக்கு. கப்பை யாரு ஜெயிக்க போறாகங்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும். பட்டினப்பாக்கம் கிரவுண்டுல நடக்குற இந்த மேட்சுல பட்டினப்பாக்கம் டீம் ஜெயிக்குமா? இல்ல நொச்சிக்குப்பத்துக்கு விட்டுத்தருமா? பொறுத்திருந்துப் பார்க்கலாம்” என்று கமெண்ட்ரிகள் காற்றில் ஒரு செய்தியைக் கொண்டு வந்தது. ஒவ்வொரு ஏரியாவுக்குள்ளும் ஊறியிருக்கும் விளையாட்டு அரசியல் அது. வருண் அறக்கட்டளை அந்த அரசியலை முறியடித்து அறம் சார்ந்த விளையாட்டை நடத்த முடிந்ததா? ஒருமுறைகூட சண்டையில்லாமல் முடிந்திராத இந்த விளையாட்டுப் போட்டி வரலாற்றில், சச்சரவுகள் ஏதும் இல்லாமல் கச்சிதமாகப் போட்டியை நடத்தி முடிக்க முடிந்ததா?

(மாற்றத்தைப் பின்தொடர்வோம்...)

விளம்பரக் கட்டுரை

நெஞ்சே எழு: மாற்றத்துக்கான தொடர்!


மேலும் படிக்க


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

ஞாயிறு 9 ஜுன் 2019