மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜுன் 2019

அணுக்கழிவு மையம்: அரசின் முடிவு என்ன?

அணுக்கழிவு மையம்: அரசின் முடிவு என்ன?

அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.

கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவரும் நிலையில், இந்தியாவிலேயே முதன்முதலாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கையில், “கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் மாறாக, கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே சேமித்துவைக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“ராதாபுரம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் அச்சத்தையும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் உரிய வகையில் வாய்மொழியாகவும் எழுத்துபூர்வமாகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் பணிகளுக்குக் கடும் எதிர்ப்புகளை அழுத்தமாகப் பதிவு செய்வார்கள்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,

மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் முடிவினை உடனடியாகக் கைவிட்டு வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் கருத்துக்கு ஏற்பவே அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!


நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

ஞாயிறு 9 ஜுன் 2019