மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 11 ஜூலை 2020

அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை: முதல்வர் பதில்!

அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை: முதல்வர் பதில்!

அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (ஜூன் 8) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், பொதுக்குழுவில் இதனை தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேனி தொகுதியில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத் மட்டும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற 9 பேர் அஞ்சலி செலுத்துவதை தடுத்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுதொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் இன்னும் அந்த பேட்டியைப் பார்க்கவில்லை. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை கேட்ட பிறகுதான் அதுகுறித்து பதில் சொல்ல முடியும். இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாகக் கூறுவது தவறான தகவல். எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்தான் இவ்வாறு கூறுகிறீர்கள். அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அதனால்தான் 9 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றனர். அமமுகவினரும் அதிமுகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

9 எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு, “இது தவறான கருத்து. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதால் யாரும் அங்கு செல்லவில்லை” என்றார்.


மேலும் படிக்க


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!


டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


சனி, 8 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon