மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

நெடுஞ்சாலை அமைக்க 20,000 மரங்கள் அழிப்பு!

நெடுஞ்சாலை அமைக்க 20,000 மரங்கள் அழிப்பு!

சென்னை - கர்நூல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக சுமார் 20,000 மரங்கள் வெட்டப்படவுள்ளன.

சென்னையை அடுத்த தட்சூர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் இடையே 126.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு NH-716B நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ’சென்னை - கர்நூல் பொருளாதார வழித்தடம்’ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள ’வரைவு சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை’யின் படி, இந்த நெடுஞ்சாலையானது திருவள்ளூர் மாவட்டம் புளிகொன்றம் வனப் பகுதியின் 700 மீட்டர் தடத்தின் வழியாகச் செல்கிறது.

இந்த நெடுஞ்சாலை திட்டத்துக்காக மொத்தம் 884.26 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 12 சதவிகிதம் வனப் பகுதியாகவும், 5 சதவிகிதம் நீர்நிலைப் பகுதியாகவும், 76 சதவிகிதம் வேளாண் நிலங்களாகவும் இருக்கின்றன. சென்னை - சேலம் நெடுஞ்சாலைத் திட்டத்தால் மக்களின் இருப்பிடம், வேளாண் நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைப் போலவே, இந்த சென்னை - கர்நூல் நெடுஞ்சாலைத் திட்டத்தால் திருவள்ளூர் மாவட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 26 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற விவசாயி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “இந்த விவகாரம் குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியரிடமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடமும், முதலமைச்சரிடமும், பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் மனு அளித்து முறையிட்டுள்ளோம். நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசுகள் எட்டு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டன. இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தால் இங்கு வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!


வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!


டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


சனி, 8 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon