மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஏப் 2020

உலகக் கோப்பை: மழையால் ஆட்டம் ரத்து!

உலகக் கோப்பை: மழையால் ஆட்டம் ரத்து!

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் 11ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 7) பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது. இடைவிடாத மழை காரணமாக டாஸ் கூட போடாமல் நடுவர்களால் போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றன.

இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மதியம் 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் கார்டிஃப் மைதானத்தில் வங்கதேச அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் போட்டியில் டவுடன் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை நியூசிலாந்து எதிர்கொள்கிறது. இதற்கு முந்தைய 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் வங்கதேச அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது நினைவிருக்கலாம். எனவே இந்த ஆண்டில் ஹாட்ரிக் தோல்வி அடையாமல் இருக்க இங்கிலாந்து முயற்சிக்கும். தற்போதைய இங்கிலாந்து அணி மிகவும் பலமானதாக இருந்தாலும் வங்கதேச அணியைக் குறைத்து மதிப்பிட இயலாது.


மேலும் படிக்க


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!


12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


சனி, 8 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon