பொருளாதாரக் கணக்கெடுப்பு: சென்னையில் பயிற்சி!

ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புக்கான தேசிய அளவிலான பயிலரங்கு ஜூன் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
பொருளாதாரக் கணக்கெடுப்பு என்பது வீடு சார்ந்த நிறுவனங்கள், சொந்தப் பயன்பாடு தவிர்த்த பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி - விநியோகம், தானிய உற்பத்தி, தோட்டப் பயிர் அல்லாத வேளாண் தொழில், வேளாண்மை சாராத தொழில் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தக் கணக்கெடுப்பில் அடங்கும். முதலாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1980, 1990, 1998, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் இந்த ஆண்டில் நடத்தப்படுகிறது.
இதற்கான தேசிய அளவிலான பயிலரங்கு மே 14ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் விரிவான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மாநில அளவிலான பயிற்சி வரும் 11ஆம் தேதி சென்னை எழும்பூர், மான்டித் சாலையில் உள்ள அம்பாசடர் பல்லவா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் மாநில அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல், தொழில் துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள மண்டல அளவிலான அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த் இப்பயிற்சிப் பயிலரங்கைத் தொடங்கிவைக்கிறார்.
மேலும் படிக்க
திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!
ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி
டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!
12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி