மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 8 ஜுன் 2019

கனிம வளம்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு!

கனிம வளம்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு!

கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை 30 நாட்களுக்குள் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் மணல் கொள்ளை நடந்துவருகிறது. மணற்கொள்ளையைத் தடுக்க வாகனங்களைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மணல் கடத்தல் வழக்குகளில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நேற்று (ஜூன் 7) விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், “மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே 30 நாட்களுக்குள் கனிம வளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குத் தொடுத்த மனுதாரர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.75,000 வரை அபராதம் விதித்து, அந்த அபராதத் தொகையை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும் அதனை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்குச் செலவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


மேலும் படிக்க


திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!


12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

சனி 8 ஜுன் 2019