மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

பணக்காரர் பட்டியலில் இந்தியப் பெண்கள்!

பணக்காரர் பட்டியலில் இந்தியப் பெண்கள்!

அமெரிக்காவில் சுயமாகத் தொழில் தொடங்கி அதிக செல்வம் ஈட்டிய பெண் தொழிலதிபர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

சுயமாகத் தொழில் தொடங்கி அதிக செல்வம் ஈட்டிய 80 பெண் தொழிலதிபர்களுக்கான இந்த ஆண்டுக்கான பட்டியலில் அமெரிக்காவின் ஏ.பி.சி. சப்ளை நிறுவனத்தின் டயானா ஹெண்ட்ரிக்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். 72 வயதான அவரது சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலராக இருக்கிறது. இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி, நேஹா நர்கேடே ஆகிய மூன்று பெண்மணிகள் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் 18ஆவது இடத்தில் உள்ள ஜெயஸ்ரீ உல்லால் (58 வயது) அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவராவார். இவரது சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராகும். சிண்டால் நிறுவனத்தின் உரிமையாளரான நீரஜா சேத்தியின் சொத்து மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலராக இருக்கிறது. இவரும் இவரது கணவர் பாரத் தேசாயும் மிச்சிகன் நகரத்தில் 1980ஆம் ஆண்டு 2000 டாலர் முதலீட்டில் நிறுவனத்தைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர் பட்டியலில் 23ஆவது இடத்தில் இருக்கிறார்.

பட்டியலில் 60ஆவது இடத்தில் இருக்கும் நேஹா நர்கடேவின் சொத்து மதிப்பு 360 மில்லியன் டாலராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. இவரது கான்ஃபுலூவெண்ட் நிறுவனத்துக்கு நெட்ஃபிளிஸ், உபேர், கோல்டுமேன் சாக்ஸ் போன்றவை வாடிக்கையாளர்களாக இருக்கின்றன.

இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் மீடியா பிரபலம் ஓபரா வின்ஃபிரே, ரியாலிட்டி டிவி பிரபலம் கைலே ஜேனர், ஃபேஷன் டிசைனர் டோரி பர்ச் உள்ளிட்ட பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon