மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: காலக்கெடு நிர்ணயம்!

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு: காலக்கெடு நிர்ணயம்!

மருத்துவப் படிப்பில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக, வரும் 11ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

கடந்த பாஜக ஆட்சியின் இறுதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆட்சி செய்துவரும் மாநிலங்களில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் உட்படச் சில மாநிலங்கள் இதனை இன்னும் அமல்படுத்தவில்லை.

கடந்த 5ஆம் தேதியன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விரைவில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் நாடெங்கும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை வரும் ஜூன் 11ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமென்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றிப் பரிசீலனை செய்து வருவதாகக் கூறியிருந்தார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இந்த நிலையில் இந்த காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon