மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

பிரசாந்த் கிஷோரோடு கூட்டணி அமைக்கும் மம்தா

பிரசாந்த் கிஷோரோடு கூட்டணி அமைக்கும் மம்தா

சட்டமன்றத் தேர்தலை 2021இல் எதிர்கொள்ள இருக்கும் மேற்கு வங்காள முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, அதற்கான உத்திகளை வகுக்கத் தொடங்கிவிட்டார். இதற்காகவே பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான செயல்திட்ட இயக்குநராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் மம்தா .

மேற்கு வங்காள மாநிலத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்ற பாஜக, இந்த மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டுக் கால கம்யூனிஸ்டு ஆட்சியை 2011ஆம் ஆண்டு வீழ்த்தி மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்த மம்தா பானர்ஜி, அதை 2016 தேர்தலிலும் தக்கவைத்துக் கொண்டார். தற்போது பாஜக மேற்கு வங்காளத்தில் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளதால் அதை எதிர்கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறார் மம்தா.

அதில் முக்கியமானதுதான் தேர்தல் நடைமுறை செயல்திட்ட வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை திருணமூல் காங்கிரஸுக்கான தேர்தல் வகுப்பாளராக நியமிக்கும் முடிவு. இதற்காக கிஷோருடன் சுமார் இரண்டு மணி நேரம் மம்தா பேசியிருப்பதாக நேற்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு துணைநின்றவர் பிரசாந்த் கிஷோர். பின் 2015ஆம் ஆண்டு பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காகத் தேர்தல் செயல் திட்டங்களை வகுத்தளித்தார். நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், மொத்தமுள்ள 171 தொகுதிகளில் 151 இடங்களை அக்கட்சி பிடிப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தார்.

இந்த நிலையில்தான் வரும் 2021 தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரோடு கூட்டணி அமைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!


விஜய்க்கு இது முதன்முறை!


இளையராஜா பாடல்களுக்கு தடை!


ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்!


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon