மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ்

பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ்

நடிகர் சங்கத் தேர்தலில் நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. நடிகர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்யக் கோரி அனைத்து சங்கங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் ஸ்ரீமன், ரமணா, பசுபதி, நந்தா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுகின்றனர்.

பாண்டவர் அணிக்கு எதிராக யார் போட்டியிடுவார்கள் என பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.

மேலும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றார். துணைத் தலைவர் பதவிக்கு உதயா மற்றும் குட்டி பத்மினி போட்டியிடுகின்றனர். உறுப்பினர்கள் நல் அபிமானங்கள் கொண்ட நாசர் மற்றும் பாக்யராஜ் இருவருமே நடிகர் சஙக்த் தேர்தலில் நேருக்கு நேர் மோதுவதால் தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon