மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

இந்தியாவை கூறுபோட முயலும் செயல்: உயர் நீதிமன்றம்!

இந்தியாவை கூறுபோட முயலும் செயல்: உயர் நீதிமன்றம்!

சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்கள் அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையம் அருகில், ஜூன் 8ஆம் தேதி ( நாளை) ’வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை.ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, சீர்காழி காவல் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், நாகை மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் என்ற பிரிவினையை மக்களிடையே தூண்டும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதால்,இந்த கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் சிறப்பம்சம். சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்கள் அரும்பாடு பட்டு ஒருங்கிணைத்த இந்தியாவை, கூறு போட முயலும் செயலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் இது போன்ற கூட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், வேறு தலைப்புடன் கூட்டம் நடத்துவது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி, விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon