மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

அஜித்துக்கு வில்லனா எஸ்.ஜே.சூர்யா?

அஜித்துக்கு வில்லனா எஸ்.ஜே.சூர்யா?

அஜித் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.

அஜித், விஜய் என இரு முன்னணி கதாநாயகர்களுக்கு அடுத்தடுத்து ஹிட்டுகள் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. தற்போது இயக்கத்தை விட்டு முழுக்க நடிப்பில் இறங்கியுள்ள அவர் வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என அனைத்து வேடங்களையும் ஏற்றுவருகிறார்.

சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நல்ல கதைகளுடன் என்னை அணுகுகின்றனர். எனவே தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன். எப்போது எனக்கு கதைகள் வருவது குறைகிறதோ அப்போது எனக்கான கதையை நானே இயக்கி நடிப்பேன்” என்று கூறினார்.

அஜித், விஜய் இருவருடனும் நட்பு பாராட்டும் அவர் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் தயாராகிவரும் நிலையில் மீண்டும் அஜித் எச்.வினோத் இயக்கத்திலேயே ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தையும் போணி கபூர் தயாரிக்கிறார். இதில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் எஸ்.ஜே.சூர்யா அதை மறுத்துள்ளார்.

“அன்பானவர்களே நான் ‘தல 60’ படத்தில் நடிப்பதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. அஜித் சார் மீதும் போணி கபூர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இது போன்ற தகவலை பரப்பவேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon