மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

அடங்க வேண்டும் குருமூர்த்தி: ஜெயக்குமார்

அடங்க வேண்டும் குருமூர்த்தி: ஜெயக்குமார்

அதிமுகவை விமர்சிப்பதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மே 30ஆம் தேதி பதவியேற்றது. ஆனால் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் யாரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கவில்லை. இதுதொடர்பாக துக்ளக் இதழ் வெளியிட்ட கார்டூனில், மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தது.

இந்த கார்ட்டூனுக்கு எதிர்வினையாற்றிய அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, “சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை இப்போது நாளெல்லாம் பெட்டிக்கடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்றப் பத்திரிகையாக மாறிவிட்டது” என்றும், பாஜக அமைச்சர்களைத்தான் அந்த கார்ட்டூன் மலிவாக சித்தரிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “குருமூர்த்தி ஒரு பத்திரிகை ஆசிரியர். துக்ளக் ஆசிரியராக சோ இருந்தபோது இதுபோன்ற விமர்சனங்கள் வந்ததில்லை.அவர் ஏன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. முன்பு அதிமுகவை திட்டி எப்படி வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியும். அதுபோன்று திரும்பவும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம். கண்ணாடி வீட்டுக்குள் நின்று கல்லெறிவதை அவர் நிறுத்த வேண்டும்” என்றார்.

மேலும், “பத்திரிகை ஆசியர்களுக்கென்று ஒரு வரையறை இருக்கிறது. அதற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாமா? நாங்கள் விமர்சனம் செய்தால் குருமூர்த்தி தாங்கமாட்டார். இத்தோடு அடக்கி வாசிப்பது நல்லது என்பதை குருமூர்த்திக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்றவர், புடவையும் பட்டாடையும் பெட்டிக்குள் இருக்கும். ஆனால் கந்தல்தான் சில்லரை போட்டவுடன் கலகலவென ஆடும். அப்படிப்பட்டவர்தான் ஆடிட்டர். மேலும் அந்த கார்ட்டூன் பாஜக அமைச்சர்களைத்தான் குறை கூறுகிறது. எனவே இதற்கு பாஜகதான் பதில் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon