மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்!

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை மூலம் ஏஐசிடிஇயிடம் மாணவர் சேர்க்கைக்காக அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது, அண்ணா பல்கலைக் கழக குழு பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்தும். அதன்படி சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக குழு தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆய்வு நடத்தியிருக்கிறது. 170 பேர் கொண்ட குழு நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 92 பொறியியல் கல்லூரிகளில் போதுமான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரியவந்தது. பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 92 கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை என்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தரமற்ற அந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால் தான் அதில் மாணவர்கள் சேராமல் தடுத்து நிறுத்தமுடியும். எனவே பட்டியலை வெளியிட வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் தற்போது வரை அதன் விவரங்கள் அண்ணா பல்கலை தரப்பில் வெளியிடப்படவில்லை. இதன் விவரங்களைத் துணைவேந்தர் சூரப்பா வெளியிட மறுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு இதற்காக அவர் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாரில், தரமற்ற கல்லூரிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட மறுக்கின்றனர். எனவே துணைவேந்தர் சூரப்பா மற்றும் பதிவாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,92 கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் அதன் உள் கட்டமைப்பு விவரங்களை வெளியிடவும் தனியார் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள பதிவாளர் குமார், தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு கொடுத்த லஞ்ச புகாரில் உண்மை இருந்தால் நேரில் வந்து ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். மாணவர்களின் நலனுக்காகவே கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை என விளக்கமளித்தார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon