மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

எய்ம்ஸ் சர்ச்சை: சுகாதாரத் துறை விளக்கம்!

எய்ம்ஸ் சர்ச்சை: சுகாதாரத் துறை விளக்கம்!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை தமிழக அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, கட்டடம் கட்டுவதற்கு இடத்தை ஆய்வு செய்தது. தமிழகம் முழுவதும் முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு மதுரை தோப்பூரில் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக அடிக்கல் நாட்டினார்.

அந்த வகையில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு தோப்பூரில் மருத்துவமனை அமைக்க நிலத்தை ஒப்படைக்கவில்லை என்று ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்த வி.எஸ்.மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் மதுரையில் அமையப்போகும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

அதன் விவரங்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியின் தொகை எவ்வளவு என்ற கேள்விக்கு, ரூ.1264 கோடியும், மண் ஆய்வு உட்பட மற்ற கட்டுமான பணிகளுக்காக ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் வரைபடம் தொடர்பான கேள்விக்கு, மருத்துவமனை கட்டுவதற்கான வரைபடம் இன்னும் இறுதியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை கட்ட தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்துள்ளதா, அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு நிலம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை தமிழக அரசால் நிலம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் ஜப்பானிலிருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் தமிழகம் வரவுள்ளனர். வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆய்வு நடைபெறவுள்ளது. அதன் பிறகு நிலத்தை ஒப்படைக்கும் பணி தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon