மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

காணாமல்போன நகைகள்: வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

காணாமல்போன நகைகள்: வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்!

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போனது தொடர்பாக 4 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பெயர் ராணி. இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை ராஜவீதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்த மாரிமுத்து, கடந்த

ஏப்ரல் 28ஆம் தேதியன்று காணாமல்போனார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மே 3ஆம் தேதியன்று கோடியக்கரை கடற்கரையில் மாரிமுத்துவின் பிணம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, அவர் பயன்படுத்திய கார் வல்லாத்திரக்கோட்டை அருகே முற்றிலுமாக எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை மணல்மேல்குடி போலீசார் விசாரித்து வந்தனர்.

மாரிமுத்துவின் மர்ம மரணத்துக்குப் பின்னர், அவர் பணியாற்றிய பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளைக் காணவில்லை என்று புகார்கள் எழுந்தன. வங்கியில் இருந்து 13.75 கிலோ நகைகள் காணாமல்போனது உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் கடன் பத்திரங்கள், பணம், ஹார்ட் டிஸ்குகள் என்று பலவற்றைக் காணவில்லை. மாயமான நகைகளை மாரிமுத்து திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 7) வங்கி ஊழியர்கள் 4 பேரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம். மேலாளர் மாரீஸ் கண்ணன், காசாளர் ரங்கசாமி, வங்கி ஊழியர்கள் கோபிக்கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களது கவனக்குறைவின் காரணமாகவே நகைகள் காணாமல்போனதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon