மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 29 மே 2020

நிவேதாவுக்கு கிடைத்த டோலிவுட் ஆஃபர்!

நிவேதாவுக்கு கிடைத்த டோலிவுட் ஆஃபர்!

தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜுக்கு தெலுங்கு திரையுலகில் வரவேற்பு அதிகரித்துவருகிறது.

தமிழ் நடிகைகள் சிலர் கதாநாயகியாக நிலைத்து நின்றாலும் பெரும்பாலான கதாநாயகிகளை மலையாளம், தெலுங்கு, திரையுலகில் இருந்தே தமிழ்த் திரையுலகம் பெற்றுள்ளது.

தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். கடந்த ஆண்டு விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் மென்டல் மதிலோ, சித்ரலஹரி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற நிவேதா தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். திரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று (ஜூன் 7) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் பூஜா ஹெக்டே கலந்துகொள்கிறார்.

கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நிவேதா நடிக்கும் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. தமண் இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

நிவேதா தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் சங்கத் தமிழன் படத்திலும் ஜகஜால கில்லாடி படத்திலும் நடித்துவருகிறார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon