மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? ரவீந்திரநாத்

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? ரவீந்திரநாத்

மத்திய அமைச்சர் பதவி தொடர்பான கேள்விக்கு தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றிபெற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். அதிமுக சார்பில் மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க ரவீந்திரநாத், வைத்திலிங்கம் இடையே போட்டியும் நிலவியது. ஆனால் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவரும் ரவீந்திரநாத், இன்று (ஜூன் 7) ஆண்டிபட்டியிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நீங்கள் எம்.பியாகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்க இடைக்கால தடை கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளாரே என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்கள் என்ன தீர்ப்பளித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நின்று மக்கள் வாக்களித்து வெற்றிபெற்றவன் நான். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். நான் வாக்கு சேகரிக்க சென்றபோது, மக்கள் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தார்களோ அதனை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய முதல் கடமை” என்றார்.

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, “நான் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிவிட்டேன். நீங்கள் அந்த கேள்வியில்தான் இருக்கிறீர்கள். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம்” என்று தெரிவித்தார். மேலும், தன்னுடைய வெற்றி விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


ராஜ்நாத் சிங் - அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி


டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு.... நடப்பது என்ன?


மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!


பி.கே.தர்மலிங்கம்: ஹௌ ஈஸ் தட்!


அர்ஜுன் ரெட்டி ‘மேஜிக்’ தம்பிக்கும் நிகழுமா?


வெள்ளி, 7 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon